Thursday 4 July 2013

Bruce lee the master of Martial Arts

தற்காப்பு கலை மன்னன் ப்ரூஸ் லீ!

வணக்கங்கள் தோழமை நெஞ்சங்களே! நலமா? நான் நலமே! இம்முறை உண்மையான ஒரு தற்காப்புக் கலைஞன் ப்ரூஸ் லீயின் சிறப்பான சில காமிக்ஸ் பங்களிப்புகளை தங்கள் கண்கள் முன்னர் விருந்துக்கு சமர்ப்பிக்க
வந்துள்ளேன்! தனது தற்காப்புக் கலை திறமை மூலமாக அகிலத்தின் அனைத்து நாடுகளையும் அசைத்துப் பார்த்தவர் நம்ம ப்ரூஸ் லீ! என்டர் தி டிராகன் திரைப்படத்தை இதுவரை பார்க்காதவர்கள் உடனடியாக கண்டு களித்து விடுங்கள். இல்லை என்றால் ஒரு உண்மையான கலைஞனின் திறமையை அறியாமலே கடந்து விடுவீர்கள்!

"வாய்ப்புகள் வராது; நாம் தான் உருவாக்க வேண்டும்" - புரூஸ் லீ


1965 ம் வருடம். அப்போது அவனுக்கு வயது 25.

இருவரும் சண்டை போடுவோம். நான் ஜெயித்தால், உன் பள்ளியைஇழுத்து மூடிவிட வேண்டும். நீ ஜெயித்தால் நான் சொல்லிக் கொடுப்பதை நிறுத்திக் கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா? என்று புதிதாக தற்காப்புக் கலைகளைக் கற்றுத்தரும் புரூஸ் லீ யிடம் குங் ஃபூவில் புகழ்பெற்ற ஆசிரியரான வோங்க் ஜாக்மென் சவால்விட்டார்எந்தவித தயக்கமும் இன்றி சவாலுக்குச் சம்மதித்தார் புரூஸ் லீ.
சண்டை ஆரம்பித்தது. பத்தே நொடியில் தோல்வியைத் தழுவினார் வோங்க்.
அந்த ஒரே நிகழ்வில் அமெரிக்கா மற்றும் சீனாவில் லீயின் புகழ் கிடுகிடுவென பரவியது. நிருபர்கள், என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக் கொண்டீர்கள்?’ என்று லீயிடம் கேட்டனர்நான் தத்துவத்தைப் பாடமாக படித்திருக்கிறேன். வாய்ப்புகள் தாமே வராது. நாம் தான் உருவாக்க வேண்டும் என்பதை அறிவேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றிக் கவலையின்றி நானும் என் கலையும் புகழ்பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்என்றார் லீ.
அதுவரை சாதாரண தொலைக்காட்சி நடிகராக இருந்த லீ உலகப் புகழ்பெற்றது அந்த நிகழ்வுக்குப் பிறகுதான்

"வாய்ப்புகள் வராதுநாம் தான் உருவாக்க வேண்டும்"


நமது முத்து காமிக்ஸில் மாவீரன் ப்ரூஸ் லீக்கு வழங்கிய மரியாதை
.








கதை
திரைப் பட தொடர்பாக கப்பலில் பயணம் மேற்கொள்ளும் ப்ரூஸ் லீ வழியில் கப்பல் உடைந்து பாதிக்கப் பட்ட வழிப் பறிக் கொள்ளையரை தனது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் கடலுள் பாய்ந்து காக்கிறார். "பாம்புக்குப் பால் வார்த்ததைப் போல" என்றொரு முதுமொழி தமிழில் உள்ளது. தீயோரை திருத்துவது மிகக் கடினம் என்ற நிலையிலும் அவர்கள் மீது மனிதாபிமானம் காட்டும் கப்பல் கேப்டனும் ப்ரூஸ் லீயும் நினைவில் நிற்கிறார்கள். அந்த கப்பல் கடும் புயலின் காரணமாக தான் போக வேண்டிய சிங்கப்பூர் செல்லாமல் புதிரானதொரு தீவில் தரை தட்டுகிறது. ஆங்கே ஒரு அழிக்கும் சக்தி அவர்களை வரவேற்கக் காத்திருக்கிறது. சென்சாய் என்ற கொடியவன் கொரிய தற்காப்புக் கலையை பதித்துள்ள கல்வெட்டை தேடிக் கொண்டு இருக்கிறான். அது கிடைத்தால் மற்ற தற்காப்புக் கலை தெரிந்தவர்களை மண்ணைக் கவ்வ வைத்துவிடலாம். ஆனால் இவனைப் போன்றதோர் தீய எண்ணம் படைத்தவனிடம் அது கிடைத்தால் எத்தகைய தீங்கு ஏற்படும் என்று எண்ணி அதை கண்டு எடுக்கும் ப்ரூஸ் லீயின் நண்பர் அதனை அழித்து விடுகிறார். இதற்கிடையே பல இன்னல்களை சந்திக்க நேரிடும் ப்ரூஸ் லீயின் குழு சிங்கப்பூருக்கு முன்னரே அளித்திருந்த ரேடியோ தகவலால் கப்பல் படை வந்து மீட்டுப் போகிறது என்பதாக கதை நிறைகிறது! ப்ரூஸ் லீயின் ஆக்ஷன் இந்தக் கதையில் சிறிது குறைவே! ஆனால் கதை நிறைவானது! படித்து மகிழ சில பக்கங்கள் கீழே!
















































நன்றி, மீண்டும் இன்னொரு காமிக்ஸ்சுடன்
சந்திப்போம்.